Monday, April 7, 2014

C Programming Basics - Lesson 5.1 Arrays (Two and Multi-Dimensional Array)

C Programming Basics - Lesson 5.1 Arrays (Two and Multi-Dimensional Array)
சென்ற பாடத்தில் Array என்றால் என்ன? அது எவ்வாறு பயன்படுகிறது? மற்றும் Single Dimensional Array இவற்றை பற்றி பார்த்தோம்...
இப்போது நாம் பார்க்கப்போவது Two and Multi-Dimenstional Array
int a[3]; - இப்படி declare செய்வது Single Dimensional Array
int a[3][3]; - இப்படி declare செய்வது Two-Dimenstional Array
int a[3][[3][3] or a[3][3][3][3] - இது Multi-Dimensional Array எனப்படுகிறது..
இதனை எப்படி ப்ரோக்ராம் இல் பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.
int a[3][3];
இந்த declaration ல் இரண்டு dimension உள்ளது.. இதை table ல் உள்ளது போல் ஒன்றை முதல் dimension ஐ row ஆகவும்  இரண்டாவது dimension ஐ column ஆகவும் எடுத்துக் கொள்வோம்.. இப்போது 3 rows மற்றும் 3 columns உள்ளது.. இதற்கு எப்படி மதிப்பு கொடுப்பது என்பதை ஒரு table வடிவில் பார்ப்போம்..
 variable name = a
0
1
2
0
310
275
365
1
10
190
325
2
405
235
240

இதை கீழ்க்கண்டவாறு declare செய்யலாம்
a[0][0]=310;
a[0][1]=275;
a[0][2]=365;
a[1][0]=10;
a[1][1]=190;
a[1]][2]=325;
a[2][0]=405;
a[2][1]=235;
a[2][2]=240;
array மதிப்புகள் அதிகமாக இருக்கும் போது இப்படி ஒவ்வொன்றாக declare செய்வது கடினமாக இருக்கும்.. எனவே ஒரு for லூப்ஐ உபயோகப்படுத்தி value ஐ input ஆக கொடுக்கலாம்... அதாவது...
for (i=0;i<3;i++)
{
for (j=0;j<3;j++)
{
scanf("%d",&a[i][j]);
}
}
scanf மற்றும் for லூப்ஐ பயன்படுத்தி இப்படி declare செய்தோம் என்றால் மிகவும் ஈசியாக இருக்கும்.. நமது நேரத்தையும் சேமிக்கலாம்.  மேற்கண்ட ப்ரோக்ராம் ல் இரண்டு for லூப் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஒரு for லூப் i value க்காகவும் மற்றொரு for லூப் j value க்காகவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் i என்பது row ஐயும் j என்பது column ஐயும் குறிக்கிறது. இதற்கு ஒரு முழு ப்ரோக்ராம்ஆக இப்பொழுது பார்ப்போம்...
#include <stdio.h>
#include <conio.h>
void main()
{
int a[3][3];
int i,j;
clrscr();
printf("Enter the array values \n");
for (i=0;i<3;i++)
{
for(j=0;j<3;j++)
{
scanf("%d",&a[i][j]);
}
}
printf("The output of Two-Dimenstional Array \n");
for (i=0;i<3;i++)
{
for (j=0;j<3;j++)
{
printf("%d\t",a[i][j]);
}
}
getch();
}
இதனுடைய output கீழ்க்கண்டவாறு இருக்கும்...
Enter the array values
310 275 365 10 190 325 405 235 240
The output of Two-Dimenstional Array
310 275 365 10 190 325 405 235 240






No comments:

Post a Comment