C Programming Basics - Lesson 5 - Arrays (Single-Dimensional Array)
முன்பு பாடங்களில் data types பற்றி பார்த்தோம். அதாவது int, float, char போன்றவை. இவை
அனைத்தும் ஒரு நேரத்தில் ஒரு மதிப்பு மட்டுமே கொடுக்க முடியும். உதாரணமாக...
int a=10; எனும் பொது a
இன் மதிப்பு 10 ஆகிறது. இப்போலுது a க்கு ஒரு
மதிப்பு மட்டுமே உள்ளது. ஒரே variable பெயரில் பல மதிப்பு
கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு array பயன்படுகிறது.
array மூன்று
வகைப்படும்
1. Single-Dimensional Array
2. Two-Dimensional Array
3. Multidimensional Array
இன்று Single Dimensional Array ஐ பற்றி மட்டும்
பார்ப்போம். மற்றதை அடுத்த வகுப்பில் பார்க்கலாம்.
Single Dimensional Array
இப்போது பாருங்கள்... int a[5]; a க்கு ஐந்து
மதிப்பு கொடுக்கலாம்.. எப்படி என்றால்.. a[0]=10, a[1]=20, a[2]=30, a[3]=40, a[4]=50.
எப்பவுமே array value 0 வில் இருந்து தொடங்க
வேண்டும். எனவே array இன் மதிப்பு 5 ஆக இருக்கும்போது 0 வில்
இருந்து தொடங்கி 4 வரை கொடுக்க வேண்டும். இதுபோல்தான் மற்ற array களுக்கும்.
இந்த Single Dimensional Array ப்ரோக்ராம்ல எப்படி
உபயோகப்படுகிறது என்று பார்ப்போம்
உதாரணமாக, 5 நம்பர்களை input ஆக
கொடுத்து அதை display செய்யப்போகிறோம். அது எப்படி என்று
பார்ப்போம்..
#include <stdio.h>
#include <conio.h>
void main()
{
int i,a[5];
printf("Enter 5 numbers");
for (i=0;i<5;i++)
{
scanf ("%d", &a[i]);
}
printf("\n The output
is");
for (i=0;i<5;i++)
{
printf ("%d", a[i]);
}
}
மேற்கண்ட ப்ரோக்ராம் இல்
இரண்டு for லூப் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் for
லூப் 5 values ஐ கொடுக்கவும் இரண்டாவது for
லூப் அதை display செய்யவும் பயன்படுகிறது. a[i]
என்று கொடுக்கும்போது ஒவ்வொரு தடவையும் i இன்
மதிப்பு 0 இல் இருந்து தொடங்கி 4 வரை increment ஆகிறது.
பின்னர் நாம் கொடுத்த மதிப்பு output ஆக இரண்டாவது for
லூப் மூலம் display செய்கிறது. இதன் output
இவ்வாறு இருக்கும்.
Enter 5 number 10 20 30 40 50
The output is 10 20 30 40 50