Sunday, February 16, 2014

C Programming Basics - Lesson 3.2 - Switch... case statement

C Programming Basics - Lesson 3.2 - Switch... case statement

சென்ற பாடத்தில் Else If statement ஐப் பற்றி பார்த்தோம்.. Else If statement இல் பல கண்டிஷன்களை கொடுத்து அது நிரல்களை செயல்படுத்தினோம்.

இப்பொழுது நாம் பார்க்கப் போவது switch..case statement. அதாவது, பல ஆப்சன்கள் கொடுத்து உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்யுங்கள் என்று சொல்வதற்கு பயன்படுவதுதான் இந்த switch..case statement. 

உங்களுக்கு நன்றாக விளங்க வேண்டும் என்பதற்காகவே எளிமையான ப்ரோக்ராம்களை கொடுக்கிறேன்.

உதாரணமாக.. நான்கு வகையான ஆப்சன்களை இந்த ப்ரோக்ராம்இல் கொடுக்கப் போகிறோம்..அதாவது.

1. கூட்டல் (Addition)
2. கழித்தல் (Subtraction)
3. வகுத்தல் (Division)
4. பெருக்கல் (Multiplication)

ஆப்சன் 1 ஐ தேர்வு செய்தால் கூட்டலில் விடை கிடைக்க வேண்டும். ஆப்சன் 2 ஐ தேர்வு செய்தால் கழித்தலின் விடை கிடைக்க வேண்டும். இப்படி பல... இதற்குதான் switch கேஸ் statement பயன்படுகிறது.

மேற்கண்ட நிரலை (Program) செயல்படுத்தல் switch statement உபயோகித்து எப்படி ப்ரோக்ராம் எழுத்துவது என்று பார்ப்போம்..

‪#‎include‬ <stdio.h>
#include <conio.h>

void main()
{
int a,b,c;
int option;

printf("Enter the value of a:");
scanf("%d",&a);

pritnf("Enter the value of b:");
scanf("%d",&b);

printf("1. Addition \n")
printf("2. Subtraction \n");
printf("3. Division \n");
printf("4. Multipication \n");

printf ("Enter your option:");
scanf("%d",&option);

switch (option)
{
case 1:
c=a+b;
printf("The output of addition is : %d", c);

case 2:
c=a-b;
printf("The output of subtraction is : %d", c);

case 3:
c=a/b;
printf("The output of division is : %d",c);

case 4:
c=a*b;
printf("The output of addition is :%d",c);

default:
printf("Wrong. Enter the correct option");

}
}

switch (option) இதில் option என்பது நாம் எந்த ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும் என்பது. case 1, case 2, case 3, case 4 என்பது நாம் கொடுத்த ஆப்சனுக்கு ஏற்றாற்போல் செயல்பட வைக்க.. default என்பது கொடுக்கப்பட்ட ஆப்சன் தவறு என்றால் இதை காண்பிக்கும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பதியுங்கள்..