Sunday, December 29, 2013

C Programming Basics - Lesson 3 - If Statement

C Programming Basics - Lesson 3 - If Statement

                                If Statement என்பது... ஒரு condition கொடுத்து அதனை சரியா? தவறா? எனக் கண்டறிவது.. சரி என்றால் இதனை செய். தவறு என்றால் இதனை செய் என்று கொடுப்பதற்குத்தான் If Statement பயன்படுகிறது.

உதாரணமாக... 12 ஐ விட 5 சிறிய நம்பர் ஆ? இல்லை பெரிய நம்பர் ஆ? என்பதை கண்டறிய c ப்ரோக்ராம் எழுதலாம்.... இதனை சில குறியீடுகள் மூலம் வகைபடுத்துவார்கள்....

இந்த குறியீடுகளை பாருங்கள்...

>     greater than    
<     less than          
>=    greater than or equal  
<=    less than or equal  
==    equal to            
!=    not equal to    

if  statement இன் பொது வடிவம்...

if (condition)
statement-1;
else
statement-2;

condition என்பது மேற்கண்ட குறியீடுகளை வைத்து நாம் கொடுக்கும் கட்டளை.. condition இல் கொடுக்கப்பட்டது சரி என்றால் statement-1 ஐ ப்ரோக்ராம் செயல்படுத்தும். condition இல் கொடுக்கப்பட்டது தவறு என்றால் statement-2 ஐ ப்ரோக்ராம் செயல்படுத்தும்...

Example:-

12 ஐ விட 5 சிறிய நம்பர் ஆ என்பதை கண்டறிய ப்ரோக்ராம் எழுதுவோம்...

முதலில் இந்த இரண்டு நம்பர் ஐயும் variables இல் store செய்ய வேண்டும்...எனவே,

a=12, b=5 என்று வைப்போம்.. இப்போது a இன் மதிப்பு 12. b  இன் மதிப்பு 5.

Program...

#include <stdio.h>
void main()
{
int a,b;
a=12;
b=5;
if(a>b)
printf("a is greater");
else
printf("b is greater");
}

இந்த ப்ரோக்ராம் இல் a>b என்பது condition. a ஐ விட b சிறியதா?. ஆம் எனில் a is greater என்பதை காட்டு.  இல்லையெனில்   b is greater என்பதை காட்டு.

இதன் output  இவ்வாறு இருக்கும்...

a is greater

இதேபோல் நீங்கள் இரண்டு நம்பர்களை  கொடுத்து பல குறியீடுகளை உபயோகித்து செய்து பாருங்கள்...


Sunday, December 22, 2013

C Programming Basics - Lesson 2.2 - scanf() function...

C Programming Basics - Lesson 2.2  -  scanf() function...

சென்ற பாடம் வரை variable க்கு மதிப்பு  a=10, b =20 என்று கொடுத்தோம். இதனை output இல் காட்டுவதற்கு printf() என்ற function ஐ உபயோகபடுத்தினோம்..

இந்த variable களின் மதிப்புகளை output இல் நாம் விரும்பியவாறு கொடுப்பதற்கு இந்த scanf() function பயன்படுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்...

உதாரணமாக, இரண்டு எண்களின் கூட்டுத்தொகை கணக்கிடும் program ஐயே எடுத்துக் கொள்வோமே...

scanf() இல்லாமல் variable க்கு நேரடியாக மதிப்பு கொடுக்கப்பட்டது முந்தைய program களின்...

முந்தைய ப்ரோக்ராம் ஒரு நினைவூட்டல் இங்கே....

#include <stdio.h>
void main()
{
 int a,b,c;
a=10;
b=20;
c=a+b;
printf("The value of c is %d",c);
}

இதனுடைய output இவ்வாறு இருக்கும்...

The value of c is 30

இப்பொழுது scanf() உபயோகித்து...


#include<stdio.h>
void main()
{
int a,b,c;
printf("Enter the value of a:");
scanf("%d",&a);
printf("\nEnter the value of b:");
scanf("%d",&b);
c=a+b;
printf("\nThe value of c is %d",c);
}


இப்பொழுது மேற்கண்ட ப்ரோக்ராம் இல் புதிதாக சில வரிகள் சேர்க்கப்பட்டுள்ளது...

printf("Enter the value of a:");

இது உங்களுக்கு தெரிந்ததுதான்.. Enter the value of a: என்பதை output இல் காட்டும்...

scanf("%d",&a);

இதில் %d என்பது control string. இது integer value என்பதால்.. இப்பொழுது நமக்கு a இன் மதிப்பு வேண்டும்.. அதை output இல கேப்பதற்கு a என்ற variable க்கு முன்னால் & என்பதை சேர்க்க வேண்டும். output இல் Enter the value of a:என்பதை காட்டிய பின் a இன் மதிப்பை நீங்கள் கொடுப்பதற்காக காத்திருக்கும்.. இப்பொழுது நீங்கள் விரும்பிய மதிப்பை a க்கு கொடுக்க வேண்டும்.

printf("\nEnter the value of b:");

இதுவும் உங்களுக்கு தெரிந்ததுதான்.. Enter the value of b : என்பதை output இல் காட்டும்... இதில் \n என்பதை அடுத்த வரியில் இது வருவதற்காக new line என்பதன் சுருக்கம்...

scanf("%d",&b);

இதுவும் மேலே சொன்ன மாதிரிதான். இதில் %d என்பது control string. இது integer value என்பதால்.. இப்பொழுது நமக்கு b  இன் மதிப்பு வேண்டும்.. அதை output இல கேப்பதற்கு b  என்ற variable க்கு முன்னால் & என்பதை சேர்க்க வேண்டும். output இல் Enter the value of b:என்பதை காட்டிய பின் b  இன் மதிப்பை நீங்கள் கொடுப்பதற்காக காத்திருக்கும்.. இப்பொழுது நீங்கள் விரும்பிய மதிப்பை b க்கு கொடுக்க வேண்டும்.

இதனுடைய output இவ்வாறு இருக்கும்...

Enter the value of a: 20
Enter the value of b: 30
The value of c is 50

இதேபோல் கழித்தல்,பெருக்கல், வகுத்தல் போன்ற ப்ரோக்ராம்களை scanf() உபயோகித்து செய்து பாருங்கள்.


Sunday, December 15, 2013

C Programming Basics - Lesson 2 - இல் கொடுக்கப்பட Programs ஓர் விரிவான விளக்கம்...

C Programming Basics - Lesson 2 - இல் கொடுக்கப்பட Programs  ஓர் விரிவான விளக்கம்...

சென்ற பாடங்களில் variable declare விதிமுறைகளை பற்றியும் data types களை பற்றியும் பார்த்தோம்..

printf() என்ற function ன் உபயோகம் பற்றியும் பார்த்தோம்...  உங்களுக்கு இதில் சந்தேகம் ஏதும் இல்லை என்று நினைக்கிறேன்.

இரண்டு எண்களின் கூட்டுத்தொகையை (addition of two numbers ) காட்டுவதற்காக எப்படி ப்ரோக்ராம் எழுதுவது என்பதையும் பார்த்தோம். அதை இப்பொழுது தெளிவாக விளக்கலாம் என்று உள்ளேன். நன்கு விளங்கிக் கொள்வதற்காக....

#include <stdio.h>
void main()
{
int a,b,c;
a=10;
b=20;
c=a+b;
printf("The value of c is %d",c);
}

விடை: The value of c is 30

10 ஐயும் 20 ஐயும் கூட்டினால் விடை 30 என்று எல்லோருக்கும் தெரியும். இதை c ப்ரோக்ராம்மிங் ஐ உபயோகித்து எப்படி செய்வது என்பதை சென்ற பாடங்களில் பார்த்தோம். அதாவது, அந்த ப்ரோக்ராம் இல்  int a,b,c;  இதில் மூன்று variable declare செய்யப் பட்டுள்ளது. பின்னர் a=10; என்று கொடுக்கும்போது இங்கு a இன் மதிப்பு 10 ஆகிறது. b=20; என்று கொடுக்கும் போது b இன் மதிப்பு 20.  c=a+b; என்று கொடுக்கும் போது, a இன் மதிப்பையும் b இன் மதிப்பையும் கூட்டி பின்னர் வரும் விடை c இல் சேமிக்கப்படுகிறது.. இப்பொழுது c இன் மதிப்பு 30 ஆகிறது.. இப்பொழுது c யுடைய மதிப்புதான் விடை அல்லவா?? எனவே அதனை output இல் காட்டுவதற்குத்தான் printf() function உபயோகிக்கப்படுகிறது. printf("The value of c is %d",c); என்று கொடுக்கும்போது output இல்  The value of c is 30 என்று காட்டுகிறது.

Exercises

Program 5) Write a c program to find the subtraction of two numbers.

இதற்கு ப்ரோக்ராம் எப்படி எழுத வேண்டும்?

#include <stdio.h>
void main()
{
int a,b,c;
a=10;
b=20;
c=a-b;
printf("The value of c is %d",c);
}

விடை: The value of c is -10

கூட்டலுக்கு எழுதுவதுபோலதான் கழித்தலும்.. சிறிய வித்தியாசம் என்னவென்றால் c=a+b; என்பதற்கு பதில் c=a-b; என்று கொடுக்க வேண்டும். இதன் output எப்படி இருக்கும்? இங்கு, a இன் மதிப்பு 10.  b இன் மதிப்பு 20. c=a-b; எனும்போது c = 10-20. 10 இல் இருந்து இருபதை கழிக்க முடியாது. அப்படிதானே? எனவே output இல் விடை -10 என்று காட்டும். -10 என்று வராமல் உங்களுக்கு சரியான விடை வர வேண்டும் என்றால் c=b-a; என்று கொடுத்தால் c = 20-10 எனவே, c இன் மதிப்பு இப்பொழுது 10.

இதுபோல் தான் மற்ற ப்ரோக்ராம்களும்...

Program 6) Write a c program to find the division of two numbers

#include <stdio.h>
void main()
{
int a,b,c;
a=10;
b=20;
c=b/a;
printf("The value of c is %d",c);
}

விடை: The value of c is 2

Program 7) Write a c program to find the multipication of two numbers.

#include <stdio.h>
void main()
{
int a,b,c;
a=10;
b=20;
c=a*b;
printf("The value of c is %d",c);
}

விடை: The value of c is 200.


Sunday, December 1, 2013

C Programming Basics - Lesson 2.1 - Variable Declare செய்வதின் விதிமுறைகள்

C Programming Basics - Lesson 2.1 -  Variable Declare செய்வதின் விதிமுறைகள்

variable என்றால் என்ன என்பதை சென்ற பாடத்தில் பார்த்தோம். இப்போது ஒரு variable declare செய்யும்போது எப்படி declare செய்ய வேண்டும் அதன் விதிமுறைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்

1)  variable தொடக்கம் முழு எண்ணாக இருக்கக் கூடாது
   
     Example:
     int 12a;   - இது தவறு
     int  a12; - இது சரி

2)  ஒரே variable க்கு இடையில் இடைவெளி விடக்கூடாது
   
    Example:
    int basic salary;  - இது தவறு
    int basicsalary; அல்லது int basic_salary;  - இது சரி

3) variable declaration இல் /,.,- போன்ற குறியீடுகள் உபயோகிக்கக் கூடாது  _ இந்த குறியீடை தவிர

   Example:
   int basic.salary; int basic/salary; int basic-salary;  - இது தவறு
   int basicsalary; அல்லது int basic_salary;  - இது சரி

4) int, char, float  போன்ற c இல் முன்னதாகவே உள்ள வார்த்தைகளை variable க்கு பெயராக கொடுக்கக் கூடாது.

    Example:
    int int ; int float;  - இது தவறு


சென்ற பாடத்தில் நான் கொடுத்த exercise களை போட்டு பார்த்தீர்களா. சந்தேகம் இருந்தால் கேளுங்கள்
 


 

Wednesday, November 13, 2013

C Programming Basics - Lesson 2 (Variables & Data Types)


C Programming Basics - Lesson 2 (Variables & Data Types)


Variables and Data Types என்றால் என்ன ?

                    இந்த Data Types பல்வேறு வகையான எண்கள், எழுத்துக்கள் போன்றவற்றை program இல் பயன்படுத்துவதற்கு இது உதவுகின்றன. Variables என்றால் memory இல் நாம் இதனை store செய்வதற்காக நாம் ஒரு பெயரை கொடுப்பது. இதில் நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய Data Types கள் கொடுக்கப்பட்டுள்ளன .

Integer - இது முழு எண்களை நாம் program இல் உபயோக்கிக்கும் போது அதை represent செய்வதற்காக இந்த data type பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக program 2 இல் a =10, இப்போது a  இன் மதிப்பு (value) 10. பத்து  என்பது முழு எண்  என்பதால்  integer பயன்படுத்தப்படுகிறது. இந்த Integer என்பது program இல் பயன்படுத்தும்போது  int  என்று கொடுக்க வேண்டும். இதற்கு control string %d.

Float - இந்த float என்பது floating point numbers ஐக் குறிக்கிறது. அதாவது புள்ளி வைத்த எண்கள். 12.5, 78.23, 124.12 என்பது போன்றவை . இந்த Float என்பது program இல் பயன்படுத்தும்போது  float  என்று கொடுக்க வேண்டும்.இதற்கு control string %f.

Character -  charater data type எழுத்துக்களை உபயோக்கிக்கும் போது பயன்படுத்தபடுகிறது. உதாரணமாக A என்ற எழுத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதோட declaration இவ்வாறு இருக்க வேண்டும் அதாவது char a = 'A '; இந்த char datatype க்கு ' ' என்ற குறிஈடுக்குள் ஒரு எழுத்து மட்டுமே கொடுக்க வேண்டும். இதற்கு control string %c. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட எழுத்துக்கள் இருந்தால் variable க்கு முன்னாள் * என்பதை இடைவெளி இல்லாமல் சேர்த்து கொள்ள வேண்டும். உதாரணமாக,  Mohamed என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் உள்ளதால் " " எந்த இரண்டு குறியீடுகளுக்குள் கொடுக்க வேண்டும்.அதாவது,  char *a = "Mohamed"; இதற்கு control string %s.

int a,b; இதுவும் ஒரு statement. எனவே முடிவில் ; (semicolon ) இடப்பட்டிருக்க வேண்டும். int a,b; இதுபோல் நாம் ஒவ்வொரு variable ஐயும் அதற்கு தகுந்த data type வைத்து declare செய்வதை variable declaration என்று கூறுவர்.

இன்னும் இதுபோல் பல data type கள் c இல் உள்ளன. அதைப்பற்றி இன்ஷா அல்லாஹ்.. இனி வரும் பாடங்களில் பார்ப்போம்.

Control Strings என்றால் என்ன ?

கீழ்க்கண்ட program களில் printf() என்ற function இல் %d %f %c என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை control string என்பர். அதாவது, output எந்த வடிவில் print செய்ய வேண்டும் என்பதை குறிக்கும். integer variable ஆக இருந்தால் %d  (decimal integer) எனவும், float variable ஆக இருந்தால் %f (float) எனவும் character variable ஆக இருந்தால் %c (character) எனவும் கொடுக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, program 4 இல் printf("The Value of c is %d",c ); இதன் output எப்படி இருக்கும் என்றால் The Value of c is 30. இங்கு %d என்பது control string . c என்பது c  value ஐ print செய்ய வேண்டும் என்பது.


Program - 2 (இரண்டு variable இல் உள்ள எண்களை காட்டுவதற்காக எழுதப்படும் c program )

#include <stdio.h>
void main() 
{
int a,b; 
a=10;
b=20;
printf ("The value of a is %d",a);
printf("The value of b is %d",b);
}

Program 3 (மூன்று வகையான variables களின் value ஐ காட்டுவதற்காக எழுதப்படும் c  program )

#include <stdio.h>
void main()
{
 int a;
 float b;
 char c;
 a=10;
 b=3.7;
 c='A';
 printf("%d",a);
 printf("%f",b);
 printf("%c",c);
}

Program-4 (இரண்டு எண்களின் கூட்டுத்தொகையை (addition of two numbers ) காட்டுவதற்காக எழுதப்படும் c  program)

#include <stdio.h>
void main()
{
int a,b,c;
a=10;
b=20;
c=a+b;
printf("The value of c is %d",c);
}


Exercises 

Program 5) Write a c program to find the subtraction of two numbers.
Program 6) Write a c program to find the division of two numbers
Program 7) Write a c program to find the multipication of two numbers.


Sunday, November 10, 2013

C Programming Basics - Lesson 1 (Introduction)

C Programming Basics -  Lesson 1

******************************************************************************

'C' வரலாற்றுச் சுருக்கம்:

        'C' என்ற கம்ப்யூடர் மொழி அமெரிக்காவின் Bell Laboratories இல் Dennis Ritchie என்பவரால் உருவாக்கப் பட்டது. இந்த 'C' Programming Language UNIX என்ற Operating System ஐ உருவாக்க பயன்படுத்த்தப் பட்டது. முதலில் BCPL (Basic Combined Programming Language) எனும் கணினி மொழி உருவாக்கப்பட்டது. பின்னர் BCPL இல் உள்ள 'B' ஐ எடுத்து B என்ற மொழி உருவானது. பின்னர் அதன் இரண்டாவது எழுத்தான 'C' ஐ வைத்து புதிய Computer Language ஐ உருவாக்கினார்கள். அதுதான் C Programming Language.

Program என்றால் என்ன?

computer இல் நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை ஒரு தொகுப்பாக கொடுப்பதுதான் program எனப்படும். நாம் விரும்பும் கட்டளைகளை/ஸாஃப்ட்வேர் போன்றவை  செயல்படுத்த எண்ணற்ற programming language கள் உள்ளன. அது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக C PROGRAMMING திகழ்கிறது



இனி C Programming க்கு உள்ளே நுழைவோம்....

******************************************************************************
"My Name is Peer Mohamed" என்பதை output இல் காட்டுவதற்காக எழுதப்படும் c program source code.
#include<stdio.h>          
void main()
{
printf("My Name is Peer Mohamed");
}
*******************************************************************************
Header Files

".h" என்று முடியக்கூடிய அனைத்தும் Header Files என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ".h" என்று முடியும் header file லிலும் பல கட்டளைகளை (functions) செய்வதற்காக ஏற்கனவே அதில் எழுதி வைக்கப் பட்டுள்ளன. உதாரணமாக "My Name is Peer Mohamed" என்பதை output இல் காட்ட வேண்டும் என்றால், அதற்கு printf() என்ற function பயன்படுத்தப்படுகிறது. இந்த printf() என்ற function ஐ பயன்படுத்த வேண்டும் என்றால் stdio.h என்ற header file ஐ நமது program இல் முன்னதாகவே include செய்து தொடங்க வேண்டும். stdio.h இல் தான் printf() என்ற function எழுதப்பட்டுள்ளது. இதை எப்படி முதலில் include செய்வது என்றால் #include<stdio.h> என்று கொடுக்க வேண்டும். stdio என்பது standard input output என்பதை குறிக்கிறது. ".h" என்பது header file. இந்த stdio.h என்ற header file இல் printf() என்ற function போல இன்னும் நிறைய function கள் உள்ளன. இதுபோல் c programming இல் நிறைய header file கள் உள்ளன. அதை அடுத்தடுத்த பாடங்களில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

Main Function

main() function என்பது இங்குதான் c programming செயல்பாடுகள் (process) தொடங்குகிறது. இந்த main() function னின்  process ஆனது  '{ ' (open curly bracket) மற்றும் ' }' (close curly bracket) இந்த இரு குறியீடுகளுக்குள் உள்ளவை அனைத்தயும் main() function செயல்படுத்தும். இந்த main() function இல்லாமல் எந்த C Program களையும் எழுத முடியாது.

Statement

நாம் இடும் ஒவ்வொரு கட்டளைகளும் statement தான். printf("My Name is Peer Mohamed"); இது ஒரு statement. ஒவ்வொரு statement இன் முடிவிலும் கண்டிப்பாக ' ; ' (semicolon) இடப்பட்டிருக்க வேண்டும்.  semicolon என்பது இந்த statement முடிந்து விட்டது என்பதை உறுதி செய்கிறது

Compile & Save

compile என்பது ஒரு program எழுதப்பட்டவுடன் அது கணினி புரிந்துகொள்ளத்தக்க மொழியாக (Machine Level Language) க்கு மாற்றப்பட வேண்டும். அந்த வேலையை compiler செய்யும். நாம் செய்ய வேண்டிய தேவை இல்லை. நாம் செய்ய வேண்டியது C Program code ஐ C Programming Software மூலம் டைப் செய்தவுடன் அது ".c" என்று save செய்ய வேண்டும். உதாரணமாக program1.c  அல்லது ஏதேனும் ஒரு பெயருடன் ".c" என்பதை சேர்த்து save செய்து கொண்டு அந்த software இல் உள்ள compile என்ற option மூலம் கம்பைல் செய்து கொள்ள வேண்டும். அது (c compiler) நீங்கள் டைப் செய்த c program இல் ஏதேனும் error (பிழைகள்) உள்ளதா என்று சரிபார்த்து விட்டு உங்களுக்கு சரியான output ஐ கொடுக்கும். error இருந்தால் C Compiler சுட்டிக் காட்டும். நீங்கள் error ஐ சரி செய்து மீண்டும் compile செய்ய வேண்டும்.

 குறிப்பு:  நமது சகோஸ் நிறைய பேர்களிடம் C Programming ஸாஃப்ட்வேர் இல்லாத காரணத்தினால், Online C Compiler மூலம் C Programming ஐ Run செய்யலாம்.
               அதற்கு " codepad.org" என்ற இணையதளத்தை open செய்து அதில் உள்ள text editor இல் கொடுக்கப்பட்ட C Program ஐ டைப் செய்து Submit என்ற பட்டனை click செய்யவும். அதில் ஏதேனும் error இருந்தால் அது காண்பிக்கும். இல்லையென்றால் output ஐ காட்டும்.

அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் பயனுள்ள கல்வியை வழங்குவானாக....